Wednesday, 8 April 2015

Waiting
Yes, we are waiting for Thalaivar’s next decision.

Friday, 20 February 2015

ரஜினியின் அரசியல் வாழ்க்கை, ஆன்மீக வாழ்க்கை, போன்ற விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இதைப் படியுங்கள்:-

ஆசியாவில், அகில உலக நட்சத்திரம்ஜாக்கிசானுக்கு (Jackie Chan) அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்குகிறார் ரஜினி, தமிழ்நாட்டின், ஏன் இந்தியாவின் சூப்பர் ஸ்டார். ஃபிரஞ்சு மொழிப் படத்தில் ஒரு காட்சியில் பின்ணணியில் ரஜினி படம் தொலைக்காட்சியில் ஓடுகிறது. ஜப்பானில் ரஜினிக்காக உயிரையும் கொடுக்கும் கூட்டம் ஒன்று உள்ளது.டைம்ஸ் ஆஃப் இந்தியாவோ அவரை சர்வதேச சூப்பர் ஸ்டார் என்கிறது.குறிப்பிட்ட ஒரு மாநில மொழியில் மட்டுமே நடிக்கும் ரஜினி எப்படி இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? தமிழ்நாட்டின் சொத்தான ரஜினி மேல் பிரஞ்சுக்காரனுக்கும், ஜப்பான்காரனுக்கும் என்ன இவ்வளவு பாசம்?ரஜினி ஆதரவாளர்கள் வழக்கமாக சொல்லும், “அவரு ரொம்ப சிம்பிள்…. தொழிலை தெய்வமாக மதிப்பவர்…” போன்றவை அல்ல, இதற்குக் காரணங்கள்.rajini207அவரை மக்களுக்கு பிடித்திருப்பதற்கு காரணம் அவருக்கு இயற்கையிலேயே, பிறப்பிலேயே அமைந்துவிட்ட தனித்தன்மையும்,ஆங்கிலத்தில் Charm, Charisma எனப்படும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வசீகரமும் தான்.என்னதான் உயிரைக் கொடுத்து வெறியாய் நடித்தாலும் இதெல்லாம் வராதுஏனெனில் இது இயற்கையாய் அமையப் பெறுவது. சிலபேருக்குதான்இது உண்டு. என்னதான் சில பூனைகள் வரிவரியாய் சூடு போட்டுக் கொண்டாலும், அவை புலி ஆகா!ரஜினியைப் போன்ற நடிகர்கள் மொத்த அண்டத்திலேயே வெகுசிலர்தான். Clint Eastwood,Charlie Chaplin, Al Pacino மற்றும் இளைய தலைமுறையில் Johnny Depp.இந்தியாவில், ஏன் ஆசியாவில் ரஜினிக்கு மட்டுமே அந்த சிறப்பு உண்டு.Clint Eastwood தனது சமீபத்திய மிகப்பெரிய வெற்றிப் படமான ‘Gran Torino’ வரை தனது தோற்றத்தை மாற்றியோ, குரலை மாற்றியோ நடித்ததில்லை. தனது எழுபத்தெட்டாவதுவயதில் கூட மிகப்பெரிய துப்பாக்கியைத் தூக்கி, வில்லன்களிடம், “I blow a hole in your face and then I go in the house… and I sleep like a baby. You can count on that.(உன் முகத்தில் சுட்டு உன்னைக் கொன்றுவிட்டு, ஒரு குழந்தையைப் போல என்னால் நிம்மதியாக தூங்க முடியும்!)” என பஞ்ச் டயலாக் பேசினாலும் திரையரங்கில் விசில் பறக்கிறது.இந்த ஸ்டைல் உள்ள நடிகர்களை ஹாலிவுட்டிலும் மாஸ் ஹீரோக்களாகவே பயன்படுத்துகிறார்கள். இந்த நடிகர்களையெல்லாம் அழுகவிட்டும், வில்லனிடம் கெஞ்ச விட்டும் படமெடுத்தால் அங்கே யாரும் பார்க்க மாட்டார்கள். க்ளின்ட் ஈஸ்ட்வுட் காவல்துறை அதிகாரியாக, ரஜினியின் கொடி பறக்குதுசிவகிரிபாணியில் அதிரடியாக நடித்த திரைப்படம்தான் ‘Dirty Harry’. இதில் அவர் சொல்லும் “Go on… Make my day” போன்ற வசனங்களை, மிகப்பெரும் நடிகர் De Niro சொல்வதுபோல் கற்பனை செய்தால் கூட மகாகேவலமாக இருக்கும்.அதேபோல் ரஜினியின், “ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரிபோன்ற வசனங்களை இந்தியாவில் வேறு யார் சொன்னாலும் பொருத்தமில்லாமல் தான் இருக்கும். ஆனால் ரஜினி அதை சொல்லும்போது அவரைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடிக்கும்.ரஜினி, க்ளின்ட் ஈஸ்ட்வுட் போன்றோர் மிகப்பெரும் நடிகர்கள், நடிகர்கள் ஆகாமல் இருந்திருந்தால்கூட, அவர்களின் தனிப்பட்ட வட்டாரத்தில் அவர்கள் ஒரு ஹீரோக்களாகவே போற்றப்பட்டிருப்பர். அவர்களின் தோற்றம், பேச்சு, செயல் அப்படி. அதை யாராலும் மறுக்க முடியாது.ரஜினியின் குறிப்பிட்ட சில படங்களே அவரின் திறமையின் ஒரு பகுதியை வெளிக்கொண்டு வந்த படங்கள். எங்கேயோ கேட்ட குரல், முள்ளும் மலரும், தளபதி, மூன்று முடிச்சு, தில்லு முல்லுஇப்படிதளபதியில் மம்முட்டி சாகும் தருவாயில் எதிரிகளால் அடித்துப் போடப்படும் போது மருத்துவமனையில்அவரிடம் ரஜினி அரற்றும் காட்சி மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. சமீபத்தில் வந்த சிவாஜி, ரஜினியை மட்டுமே முதலாய் வைத்து எடுக்கப்பட்ட மிகப் பெரிய வெற்றி பெற்ற படம். பலமான கதையே இல்லாமல், வெறும் ரஜினியால் மட்டுமே ஒரு படத்தை தூக்கி நிறுத்த முடிகிறதெனில், நல்ல கதையோடு, ரஜினி என்ற திறமையும், கம்பீரமும் வாய்ந்த ஒரு மாபெரும் நடிகரை சரியாய் பயன்படுத்தி எடுக்கப்படும் படம் எப்படிப்பட்ட வெற்றி பெறும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.சமீபத்தில் ஒரு தனியா டிவியின் விருது நிகழ்ச்சியில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டபோது, ரஜினியே, தான் ஷாரூக்கான் நடித்த ‘Chak de India’ திரைப்படம் போன்ற கதையுள்ள படங்களில் நடிக்க விரும்புவதாகத் பேசியது உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம்.ரஜினி என்ற, திரைப்படக் கல்லூரியில் இணைந்து படிக்கும் அளவுக்கு சினிமாவைக்காதலித்த அந்த நடிகனுக்குள் இருக்கும் சினிமா தாகத்தையும் ஏக்கத்தையும் உணர்த்தியது ரஜினியின் அந்தப் பேச்சு.‘திரைப் படத்தில் படத்தின் கதாநாயகனான, அந்த ஹாக்கி பயிற்சியாளர் வேடத்தில் ரஜினியை கற்பனை செய்து பாருங்கள். நினைக்கவே புல்லரிக்கிறது.பிய்த்து உதறியிருப்பார்.ஆனால் இங்கு ரஜினியை வைத்து சிவாஜி எடுக்கத்தான் விரும்புகிறார்கள்… ‘Chak de india’ சீண்டப்படுவதேயில்லை!இங்கும் ‘Chak De India’ எடுக்க இயக்குனர்கள்உள்ளார்கள். பல இயக்குநர்கள் அப்படி சொல்ல முடியும். ஆனால் ரஜினி என்ற இமயத்தை நெருங்கி கதை சொல்ல இவர்கள் தயங்குவதாகவே நான் கருதுகிறேன். ஆனால் ரஜினி எப்போதுமே தனக்குள் இருக்கும் நடிகருக்கான சரியான தீனி வரும்போது பட்டினி போட்டதில்லை என்பதை அந்த இயக்குனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.ரசிகர்கள் உலகத்தின் ஒரே சூப்பர் ஸ்டாரான அந்த மாபெரும் நடிகரிடம் நான் இன்னொரு பாட்ஷாவையும், இன்னொரு படையப்பாவையும் எவ்வளவு எதிர்பார்க்கிறேனோ, அதேபோல் இன்னொரு தில்லுமுல்லுவையோ, இன்னொரு முள்ளும் மலருமையோ எதிர்பார்க்கிறேன்.இதுபோல் மாறுபட்ட இரண்டு வகைப் படங்களிலும் நடிக்க உலகத் திரைப்பட வரலாற்றில் ஒருவரால் மட்டுமே முடிந்ததுமுடியும்!அவர் ரஜினிரஜினி மட்டுமே!  credits - by ilavarasan writer