Thursday, 19 February 2015

ரஜினியிடம் ஒரே ஒரு வேண்டுகோள் ,

தலைவா பொறுத்ததெல்லாம் போதும், பொங்கியெழு..... உன்னைப் பற்றி தப்புக்கணக்கு போடும் போலிகளுக்கு உன் ஆறாவது முகத்தைக் காட்டு.

தலைமையே இல்லாத தமிழகத்துக்கு தலைமை ஏற்க வா !! இனி நீ அமைதி காக்கும் ஒவ்வொரு நாளும் உனக்கெதிரான சதிவலை பெரிதாகி பெரிதாகி உன்னையும் எங்களையும் வரலாற்றிலிருந்தே மறைத்துவிடும். அந்த அளவு வீரியத்துடன் பின்னப்படும் அச்சதிவலையை அறுக்க உன் ஒரு வார்த்தை போதும். அந்த ஒருவார்த்தை தமிழக அரசியலையே திருப்பிப் போடும். ஆம் அது  மாநாட்டுத் தேதி.......


அது அரசியல் கட்சி துவக்க விழா மாநாடோ , இல்லை சாதாரண ரசிகர் மன்ற மாநாடோ, "மேடையில் நீ  நின்று எங்கள் மத்தியில் நீ உதிர்க்கும் அந்த புன்னகையைக்  காண ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோடிக் கண்களில் ஒரு ஜோடிக் கண்கள் என்னுடையதாக இருக்கும்". அந்த அறிவிப்பு நம் கட்சியின் பெயராக இருந்தாலும் சரி நம் அடுத்த படத்தின் பெயராக இருந்தாலும் சரி வெற்றி பெற வைக்க என்னுடைய இரு கரங்களும் காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment